‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம், 'கங்குவா'. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் இந்தி நடிகை திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3-டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வந்தது. மழையிலும் இடை விடாமல் போர்க்காட்சிகளின் படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் அங்கு நடைபெற்ற படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்துள்ளது. பின்னர் சூர்யா, படக்குழுவுக்குப் பிரியாணி வழங்கி மகிழ்ந்தார். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.