தமிழ் சினிமா

கூடு படத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

செய்திப்பிரிவு

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஏ என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் எம்.கணேஷ் மற்றும் கண்ணன் பி தயாரிக்கும் படம், 'கூடு’. இதன் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.

உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் இந்தத் படத்தை அறிமுக இயக்குனர் ஜோயல் விஜய் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, “இது ஃபேன்டசி காமெடியாக உருவாகிறது. கோவை அருகில் உள்ள கிராமத்தில் நடக்கும் கதை. சிவகங்கை அருகே பொத்தக்குடி கிராமத்தில் மின்சாரப் பெட்டியில் குருவி கூடு கட்டியதால், 45 நாட்கள் குருவி, குஞ்சு பொரித்து பறக்கும் வரை கரன்ட் இல்லாமல் வாழ்ந்த கிராம மக்களின் நெகிழ்ச்சி சம்பவத்தைத் தழுவி இந்தப் படம் தயாராகிறது. கதை, திரைக்கதையை டேவிட் வில்லியம்ஸ் எழுதுகிறார். நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும்” என்றார்.

SCROLL FOR NEXT