தமிழ் சினிமா

யாதும் ஊரே யாவரும் கேளிர் ரிலீஸ் எப்போது?

செய்திப்பிரிவு

அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இதில் விஜய் சேதுபதி நாயகனாகவும் அவர் ஜோடியாக மேகா ஆகாஷும் நடித்துள்ளனர்.

மோகன் ராஜா, மகிழ்திருமேனி, கனிகா, ரித்விகா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கிதுரை தயாரித்துள்ளார்.

இந்தப் படம் எப்போதோ முடிந்துவிட்டது. பல்வேறு காரணங்களால், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுத் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது இதன் ரிலீஸ் தேதியை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சக்தி பிலிம் பேக்டரி படத்தை வெளியிடுகிறது.

SCROLL FOR NEXT