மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் 'துப்பறிவாளன்' படப்பிடிப்பு செப்டம்பர் 14ம் தேதி தொடங்கவிருக்கிறது.
விஷால் - மிஷ்கின் இணையும் 'துப்பறிவாளன்' படத்தின் பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது.
சுராஜ் இயக்கத்தில் உருவான 'கத்தி சண்டை' படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் விஷால். அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இன்னும் 2 பாடல்கள் படப்பிடிப்பு மட்டுமே எஞ்சியிருக்கிறது.
'கத்தி சண்டை' முடிவடைந்ததைத் தொடர்ந்து 'துப்பறிவாளன்' படத்தை தொடங்கவிருக்கிறார் விஷால். இதன் படப்பிடிப்பு செப்டம்பர் 14ம் தேதி முதல் சென்னையில் தொடங்கவிருக்கிறது.
நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகி இருக்கும் இப்படத்துக்கு அரோல் குரலி இசையமைக்க இருக்கிறார். இதர தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள்.