நடிகர் ஜீவா 
தமிழ் சினிமா

தயாரிப்பாளர் ஆகிறார் ஜீவா!

செய்திப்பிரிவு

நடிகர் ஜீவா கடைசியாக ‘வரலாறு முக்கியம்’ படத்தில் நடித்திருந்தார். இப்போது, மணிகண்டன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதை, பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இதையடுத்து அவர் சொந்தமாகப் படம் தயாரித்து நடிக்கிறார். ஜீவாவின் தந்தை ஆர்.பி.சவுத்ரி பிரபல தயாரிப்பாளர் என்றாலும் நடிகர் ஜீவா, தானும் தயாரிப்பாளர் ஆகிறார்.

அவர் தயாரிக்கும் படத்தை ராஜேஷ் எம் இயக்குகிறார். இருவரும் ஏற்கெனவே சூப்பர் ஹிட்டான ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் இணைந்திருந்தனர். இப்போது மீண்டும் இணைய இருக்கின்றனர். ராஜேஷ் எம். இப்போது ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT