அஜித் | படம்: ட்விட்டர் 
தமிழ் சினிமா

சமையல் கலைஞரான அஜித்!

செய்திப்பிரிவு

நடிகர் அஜித் அடுத்து மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு, அஜித் பிறந்த நாளான மே 1-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே அஜித், உலக பைக் டூரின் (பரஸ்பர மரியாதை பயணம்) ஒரு பகுதியாக, நேபாளம் சென்றுள்ளார். அங்கு தான் தங்கியிருந்த ஓட்டல் ஒன்றில் செஃபாக மாறி அவர் சமையல் செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்நிலையில் நடிகர் அஜித் அடுத்த மாதம் 6-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

SCROLL FOR NEXT