ஷெரின் 
தமிழ் சினிமா

'ஒரு மாதத்தில் திருமணமா?' - நடிகை ஷெரின் விளக்கம்

செய்திப்பிரிவு

தனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஷெரின். தொடர்ந்து ‘விசில்’ உட்பட பல படங்களில் நடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் மேலும் பிரபலமான ஷெரின், இப்போது ‘குக் வித் கோமாளி - சீசன் 4’-ல் போட்டியாளராக இருக்கிறார். இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைதளத்தில் பதிலளித்தார் ஷெரின். அப்போது ரசிகர் ஒருவர், திருமணம் பற்றி கேட்டபோது, ஒரு மாதத்தில் நடக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு ஷெரின் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “சமீபத்தில் ஒரு ரசிகர், என் திருமணம் எப்போது என்று கேட்டார். ஒரு மாதத்தில் நடக்கும் என்று ஜோக்கிற்காக சொன்னேன். அதை நம்பி பரப்பிவிட்டார்கள். நான் ஒரு மாதத்துக்குள் திருமணம் செய்துகொள்ளவில்லை. நான் சொன்ன ஜோக் இவ்வளவு பெரிய செய்தியாகும் என்று நினைக்கவில்லை. எனக்கு இப்போது திருமணம் இல்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT