தமிழ் சினிமா

தெய்வ மச்சான் காமெடி படம் - நடிகர் விமல் தகவல்

செய்திப்பிரிவு

விமல் நாயகனாக நடித்துள்ள படம் 'தெய்வ மச்சான்'. அவர் ஜோடியாக நேகா நடிக்கிறார். பாண்டியராஜன், 'ஆடுகளம்' நரேன், பாலசரவணன், வேல.ராமமூர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர்.

கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை மார்டின் நிர்மல் குமார் இயக்கியுள்ளார். உதய் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் உதயகுமார், கீதா உதயகுமார், எம்.பி.வீரமணி தயாரித்துள்ளனர்.

வரும் 21ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விமல் கூறியதாவது: ‘தெய்வமச்சான்’ கிராமத்துப் பின்னணியில் நடக்கும் நகைச்சுவை படம். என் தந்தையாக பாண்டியராஜன் நடித்திருக்கிறார். 1997-98ம் ஆண்டில் நான் மெட்ரோ வாட்டரில் சூப்பர்வைசர் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது வள்ளுவர் கோட்டம் அருகே வேலை பார்த்துக்கொண்டிருந்த போது சிக்னலில் வந்த கார் ஒன்றைப் பார்த்தேன்.

பாண்டியராஜன் சார் காரில் டிபன் சாப்பிட்டுக் கொண்டே போய்கொண்டிருந்தார். நடிகரானால் காரில் போகலாம் என்று நினைத்தேன். அதே போல நடிகராகி, காரில் டிபன் சாப்பிட்டுக்கொண்டு போனேன். இந்தப் படத்தில் அனிதா சம்பத் என் தங்கையாக நடித்திருக்கிறார். கதைப்படி கனவில் குதிரையில் வரும் வேல ராமமூர்த்தி, என்ன சொல்கிறாரோ, அது நடந்துவிடும். அவர் என்ன சொன்னார், அது நடந்ததா? என்பதுதான் கதை. கண்டிப்பாக எல்லோரும் ரசிக்கும்படியாக இந்தப் படம் இருக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT