தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வன் 2’ -ல் வெறித்தனமான சண்டைக் காட்சிகள் இருக்கும்: திரிஷா

செய்திப்பிரிவு

‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தில் அதிகமான வெறித்தனம் கொண்ட சண்டைக் காட்சிகள் இருக்கும் என்று நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ஆன்ந்த்ம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகை த்ரிஷா பேசும்போது, “பொன்னியின் செல்வன் 1 ஆம் பாகத்தில் எனது கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அன்பும் ஆதரவும் காட்டியதற்கு நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். இரண்டாம் பாகம் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். கார்த்திக்கும் எனக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி பற்றி அனைவரும் பேசினர். இந்தத் திரைப்படத்தில் அதிகமான வெறித்தனம் கொண்ட சண்டைக் காட்சிகள் இருக்கும். திரையரங்கில் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. உங்கள் அனைவருக்கும் இது பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

நடிகர் ஜெயராம் பேசும்போது, “இந்த மாலைப் பொழுதை ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்தி, விக்ரம், நடிகை த்ரிஷா போன்ற சிறந்த கலைஞர்கள் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸின் அனைத்து முக்கிய பிரமுகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். கடந்த ஆண்டு பிஎஸ் 1 நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் நான் ஷூட்டிங்கில் நடந்த சில சம்பவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு மணிரத்னம் கேட்டார். அப்போதுதான் முழு வேடிக்கையான நாடகம் நடந்தது. இந்த படம் தொடங்கியதும், எம்.ஆர்.சி.நகரில் பயிற்சி பெறும் மற்ற நடிகர்கள் போல் குதிரை சவாரி கற்கும்படி மணி சார் என்னிடம் கேட்டார்.

தாய்லாந்தில் காட்சிகளை படமாக்க முடிவு செய்தபோது, குதிரைகள் புதியவை. அனைத்து நடிகர்களும் நிறைய சிரமங்களை அனுபவித்தனர். அப்போதுதான், சிறு வயது முதலே குதிரை சவாரி செய்து அதில் நிபுணராக இருக்கும் பிரபுவிடம் ஆலோசனை கேட்டேன். அதில் நிறைய வேடிக்கையான அனுபவங்கள் இந்த படப்பிடிப்பின்போது நடந்தன. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படம் ஏப்ரல் 28 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தைப் பார்த்து மகிழும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT