தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு வரும் 30ல், அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் தேர்தல் நடக்கிறது. அங்கு கார்களை நிறுத்த இடவசதி இல்லாததால் அரசுக்கு சொந்தமான எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் தேர்தலை நடத்தத் தயாரிப்பாளர் கேயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த முறை 1406 தயாரிப்பாளர்கள், வாக்காளர்களாக இருக்கின்றனர். குறைந்தது 1200 பேர் வாக்களிக்க வருவார்கள். அனைவரும் கார்களில் வந்து இறங்குவதற்கும், நிறுத்துவதற்குமான இட வசதி அக்கல்லூரியில் இல்லை. அரசுக்கு சொந்தமான எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் போதுமான இட வசதி இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் எல்லா சூழலையும் கவனத்தில் கொண்டு தேர்தல் நடத்தும் இடத்தை திரைப்பட கல்லூரி வளாகத்திற்கு மாற்றுவது பொருத்தமானதாக இருக்கும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.