சந்தானம் நடித்த, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’, பிரபுவின் ‘மீன் குழம்பும் மண்பானையும்’, ‘நாகேஷ் திரையரங்கம்’ உட்பட சில படங்களில் நடித்தவர் ஆஷ்னா ஜாவேரி.
இவர் இப்போது சேத்தன் சீனு ஜோடியாக நடிக்கும் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆறுபடை புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சங்கர் சாரதி இயக்குகிறார். பிரேம், மனோபாலா, சாய்தீனா, ராஜசிம்மன், கராத்தே ராஜா உட்பட பலர் நடிக்கின்றனர். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்கிறார். அஸ்வத் இசையமைக்கிறார். வடசென்னையை மையமாகக் கொண்டு ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இந்தப் படம் சென்னை, சிக்மகளூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன.