யோகி பாபு | கோப்புப்படம் 
தமிழ் சினிமா

யோகி பாபுவின் ‘யானை முகத்தான்’ ரிலீஸ் தள்ளி வைப்பு

செய்திப்பிரிவு

மலையாள இயக்குநர் ரஜிஷா மிதிலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம், ‘யானை முகத்தான்’. யோகி பாபு, ரமேஷ் திலக், ஊர்வசி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்று, சாகுந்தலம், திருவின் குரல் உட்பட 7 திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதால், இதன் ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

‘எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஒரு வாரம் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளோம். வரும் 21ம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகும்’ என்று படக்குழு அறிவித்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT