பேட்ட படத்தில் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் | படம்: ட்விட்டர் 
தமிழ் சினிமா

'நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை' - ரஜினிகாந்தின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்த சசிகுமார்

செய்திப்பிரிவு

சென்னை: சசிகுமார் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ படத்தை பார்த்து மனதார பாராட்டி இருந்தார் ரஜினிகாந்த். அவரது பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சசிகுமார். இதனை சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

“நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் 'அயோத்தி' படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது. மிக்க நன்றி சார்” என சசிகுமார் ட்வீட் செய்துள்ளார். இதில் சூப்பர்ஸ்டார் மற்றும் பேட்ட மாலிக் என்ற ஹேஷ்டேக்கை அவர் பயன்படுத்தியுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘பேட்ட’ படத்தில் சசிகுமார் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சசிகுமார், இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ரானி உட்பட பலர் நடித்து வெளியான படம், ‘அயோத்தி’. டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கி இருந்தார். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பேசிய இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT