தந்தை சுப்ரமணியத்துடன் நடிகர் அஜித் குமார் 
தமிழ் சினிமா

நடிகர் அஜித்குமார் தந்தை பி.சுப்ரமணியம் காலமானார்

செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் இன்று (மார்ச் 24) காலமானார். அவருக்கு வயது 84.

கடந்த நான்கு ஆண்டுகளாகவே பக்கவாதம் மற்றும் வயது மூப்பின் காரணமான தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டிருந்த பி.சுப்ரமணியம் இன்று காலை இயற்கை எய்தினார்.

இந்தத் தகவல் வெளியானதை அடுத்து சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அஜித் தந்தை சுப்ரமணியத்தின் உடல் காலை 10 மணிக்கு மேல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் தகனம் செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT