தமிழ் சினிமா

ஜூன் 23-ல் விஸ்வரூபம் 2 ட்ரெய்லர் வெளியீடு?- கமல் மறுப்பு

ஸ்கிரீனன்

ஜூன் 23-ம் தேதி 'விஸ்வரூபம் 2' ட்ரெய்லர் வெளியாகும் என பரவிய தகவலுக்கு கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

'விஸ்வரூபம் 2' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. மேலும், இறுதிகட்ட பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டிற்குள் 'விஸ்வரூபம் 2' வெளியிடப்படும் என கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜூன் 23-ல் 'விஸ்வரூபம் 2' ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றும், தீபாவளிக்கு படம் வெளியாகும் என சமூகவலைதளத்தில் தகவல்கள் வெளியாகின. தற்போது ட்விட்டர் பக்கத்தில் உடனடியாக தகவலைத் தெரிவிக்கும் கமல், 'விஸ்வரூபம் 2' குறித்த தகவலுக்கு, "விஸ்வரூபம் 2 ட்ரெய்லர் குறித்த செய்தி தவறானது. ரசிகர்களின் ஆர்வத்துக்கு இணங்க படத்தின் பணிகளில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து ராஜ்கமல் நிறுவனம் அவ்வப்போது உரிய தகவல்களை வெளியிடும். விஸ்வரூபம் 2 வெளியீட்டை நாங்கள்தான் உறுதி செய்வோம். விஸ்வரூபம் இந்தி உரிமையும் எங்களிடமே இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT