தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி: நாளை இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பங்குதாரரான மார்க் மெட்ரோ நிறுவனம் சார்பில், சென்னையில் ‘அன்பின் சிறகுகள்’ என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நாளை (19-ம் தேதி) இரவு 7 மணி முதல் 11.30 மணி வரை நடக்க உள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், நிகழ்ச்சியை காண வரும் மெட்ரோ ரயில் பயணிகள், பொதுமக்களின் வசதிக்காக நாளை மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

மெட்ரோ பயணிகள், பொதுமக்கள்அன்றைய தினம் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி 20 சதவீத கட்டண தள்ளுபடி பெறலாம்.

மேலும், நிகழ்ச்சிக்கு வருவோரின் வசதிக்காக, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் முதல் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாகன இணைப்பு சேவையும் மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT