தமிழ் சினிமா

நடிகர் கார்த்தி மருத்துவமனையில் அனுமதி

ஸ்கிரீனன்

ஃபுட் பாய்சன் காரணமாக நடிகர் கார்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிக்கும் ’கொம்பன்’ படத்தின் படப்பிடிப்பு பரமக்குடியில் நடைபெற்று வருகிறது. ’குட்டிப்புலி’ முத்தையா இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படப்பிடிப்பின் போது கார்த்திக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கார்த்தி சென்னை திரும்பியுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கார்த்தி அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு ஃபுட் பாய்சனால் காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சிகிச்சை முடிந்து இன்று இரவே கார்த்தி வீடு திரும்பி விடுவார் என்று நம்மிடம் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT