பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரித்து வரும் படத்தில் ஜோதிகாவிற்கு பதிலாக பிந்து மாதவி நடித்து வருகிறார்.
சிம்பு, நயன்தாரா நடிக்கும் 'இது நம்ம ஆளு' படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் பாண்டிராஜ். இப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.
குறளரசன் இசையமைத்து வரும் இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, சூர்யா தொடங்கியிருக்கும் 2டி நிறுவனம் தயாரிக்க இருக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் பாண்டிராஜ்.
முழுக்க குழந்தைகளைப் பின்னணியாக கொண்ட கதைக்களமாகும். இப்படத்தில் குழந்தைகளுக்கு அப்பாவாக சூர்யா - ஜோதிகா இருவரும் நடிக்க இருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகின.
தற்போது ஜோதிகா இப்படத்தில் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக பிந்து மாதவி, சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். குழந்தைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது காட்சிப்படுத்தி வருகிறார்கள். இப்படத்தில் சூர்யாவின் காட்சிகளை 3 நாட்கள் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். 'அஞ்சான்' பட வேலைகள் முடிந்து வெங்கட்பிரபு இயக்கி வரும் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இப்படத்தில் நடித்துக் கொண்டே பாண்டிராஜ் இயக்கி வரும் படத்தில் வரும் காட்சிகளையும் அவ்வப்போது நடித்து முடிக்க திட்டமிட்டு இருக்கிறார். இன்னும் இப்படத்திற்கு பெயரிடப்படவில்லை. 'இது நம்ம ஆளு' படத்தின் இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் முழுவீச்சில் சூர்யா - பிந்துமாதவி படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் பாண்டிராஜ்.