இரட்டை வரிவிதிப்பு முறை தொடர்பாக ரஜினிகாந்த் தன்னுடைய கருத்தைத் தெரிவித்தமைக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி விதித்தது தொடர்பாக முன்னணி நடிகர்கள் பலரும் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ரஜினியும் குரல் கொடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.
ரஜினி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்த் திரையுலகை நம்பியுள்ள லட்சோப லட்ச மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு திரையுலகினர் கோரிக்கையை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று ட்வீட் செய்தார்.
ரஜினியின் ட்வீட்டை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகரிந்துள்ளார் கமல். மேலும், "இரட்டை வரி விதிப்புக்கு எதிராக தங்கள் அக்கறை குரலை பதிவு செய்தமைக்கு நன்றி ரஜினிகாந்த் அவர்களே. கனவான்களாக நாம் முதலில் நமது எதிர்ப்பைப் பதிவு செய்வோம். பின்னர் மற்றதை பார்த்துக் கொள்வோம்" என்று ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளார் கமல்.