தமிழ் சினிமா

நவம்பர் 3-ம் தேதி வெளியாகிறது நெஞ்சில் துணிவிருந்தால்

செய்திப்பிரிவு

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சில் துணிவிருந்தால்', நவம்பர் 3-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி வெளியீடு என்று முதலில் அறிவித்திருந்தார்கள். தற்போது தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கி நவம்பர் 3-ம் தேதி வெளியீடு என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், ஹரீஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இப்படத்தை அன்னை பிலிம் ஃபாக்டரி சார்பில் ஆண்டனி தயாரித்துள்ளார்.

'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் பணிகளுக்கு இடையே 'ஏஞ்சலினா' என்ற படத்தின் சுமார் 80% படப்பிடிப்பையும் முடித்துள்ளார் சுசீந்திரன்.

SCROLL FOR NEXT