தமிழ் சினிமா

‘மெமரீஸ்’ சைக்கலாஜிக்கல் திரில்லர் படம்: இயக்குநர்

செய்திப்பிரிவு

ஷிஜு தமீன்ஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படம், ‘மெமரீஸ்’. ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கும் இந்தப் படத்தில், வெற்றி நாயகனாக நடித்துள்ளார். பார்வதி அருண், ரமேஷ் திலக் உட்பட பலர் நடிக்கின்றனர். கவாஸ்கர் அவினாஷ் இசையமைக்கிறார்.

அஜயன் பாலா வசனம் எழுதியுள்ளார். வரும் 10-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி இயக்குநர் ஷியாம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் கேரளாவைச் சேர்ந்தவன். தமிழில் படம் இயக்கி இருக்கிறேன்.

இந்தக்கதைக்காகக் கேரளாவில் தயாரிப்பாளர் தேடிய போது யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. வெற்றி, நாயகனாக நடிக்கிறார் என்று கூறிய போது தயாரிப்பாளர் ஷிஜு சார் உடனே ஒப்புக்கொண்டார். வெற்றி, இதில் 4 தோற்றங்களில் வருவார். மிக சிக்கலான சைக்கலாஜிக்கல் திரில்லர் படம் இது. புது அனுபவமாக இருக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT