தமிழ் சினிமா

பாங்காக்கில் சிம்பு டப்பிங் பேசியது ஏன்?

செய்திப்பிரிவு

சிலம்பரசன், கவுதம் கார்த்திக், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம், 'பத்து தல'. ஒப்பிலி கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

கன்னடத்தில் வெளியான ‘முஃப்தி’ என்ற படத்தின் ரீமேக் இது. வரும் 30ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் கிருஷ்ணா படம் பற்றி கூறும்போது, “இது ரீமேக் கிடையாது. தழுவல்தான். 90 சதவிகிதம் வேறாகக் கொடுத்திருக்கிறேன். இரண்டு மூன்று காட்சிகள் மட்டும்தான் ஒன்றாக இருக்கும். சிலம்பரசன் சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் நிறைய ஆச்சரியமான விஷயங்கள் இருக்கும். சிலம்பரசன், பாங்க்காக் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியில் இருக்கிறார். அதனால் அங்கிருந்து இருந்து டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்தார்" என்றார்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, வரும் 18ம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடக்கிறது.

SCROLL FOR NEXT