‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ உட்பட சில படங்களை இயக்கியவர் செல்வராகவன். விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் மூலம் நடிகரான அவர், அருண் மாதேஸ்வரன் இயக்கிய ‘சாணிக்காயிதம்’, சமீபத்தில் வெளியான ‘பகாசூரன்’ படங்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், தனக்கு நண்பர்களே இல்லை என்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், “அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாக வேலையைத் தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாக இருப்பவர்களைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது. எங்கு போய் நட்பைத் தேடுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.