தமிழ் சினிமா

இயக்குநர் சுந்தர்.சியின் ‘சங்கமித்ரா’ படத்தில் பூஜா ஹெக்டே

செய்திப்பிரிவு

இயக்குநர் சுந்தர்.சி இயக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் சுந்தர்.சி., சில ஆண்டுகளுக்கு முன் தொடங்க இருந்த படம், ‘சங்கமித்ரா. தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, இந்தப் படத்தைத் தயாரிக்க இருந்தார். ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் முன்னணி கேரக்டர்களில் நடிக்க இருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தமானார். மெகா பட்ஜெட்டில் தொடங்க இருந்த இந்தப் படம் திடீரென நின்றது.

இந்நிலையில், இந்தப் படத்தை இப்போது லைகா நிறுவனம் தயாரிக்க முன் வந்துள்ளது. இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே ஒப்பந்தமான ஜெயம் ரவி விலகிவிட்டார். ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு வரலாற்றுக் கதையில் நடிக்க விரும்பவில்லை என்பதால் விலகியதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக விஷால் இணைந்துள்ளார். விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக, பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி இருக்கிறார். அவருக்குச் சம்பளமாக ரூ.4.5 கோடி பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

SCROLL FOR NEXT