தமிழ் சினிமா

“உங்கள் அன்புதான் என்னை முன்னேறச்செய்கிறது” - சினிமாவில் 13 ஆண்டுகள் குறித்து சமந்தா நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

“உங்கள் அன்புதான் என்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது” என சினிமாவில் 13 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து நடிகை சமந்தா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா ‘பாணாகாத்தாடி’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்னதாக அவர் தெலுங்கில் ‘ஏ மாய சேஷாவே’ எனும் படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கௌதம் வாசுதேவ் மேனன் இந்தப் படத்தினை இயக்கியிருந்தார். இந்தப் படம் பிப்.26, 2010ஆம் ஆண்டு வெளியானது. இன்றுடன் 13 வருடங்கள் ஆகின்றன. இந்தப் படம் ‘விண்னைத்தாண்டி வருவாயா’ என தமிழிலும் எடுக்கப்பட்டது.

நடிகை சமந்தா திரையுலகில் 13 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ்டேக்கிட்டு கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்களுடைய அன்பை புரிந்து கொள்கிறேன். இதுதான் என்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது. இப்போது மட்டுமல்ல எப்போதும், நான் என்னவாக இருக்கிறேனோ அது உங்களால்தான். 13 ஆண்டுகள் ஆகிறது” என பதிவிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா அண்மையில் திடீரென மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவல் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது நடிப்பில் அடுத்து ‘சாகுந்தலம்’ திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் சமந்தா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT