தமிழ் சினிமா

‘அவரை சந்தித்ததும் என் முகத்தில் ஆனந்தம்’ - இளையராஜா குறித்து நெகிழ்ந்த நாக சைதன்யா

செய்திப்பிரிவு

‘மேஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தபோது எனது முகத்தில் மிகப் பெரிய ஆனந்தம். அவருடை இசை என்னுடைய வாழ்க்கை பயணங்களில் நிறைந்துள்ளது” என இளையராஜா குறித்து நடிகர் நாக சைதன்யா நெகிழ்ந்துள்ளார்.

‘மன்மதலீலை’ படத்திற்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு நாக சைதன்யாவுடன் கைகோத்திருக்கிறார். தமிழ், தெலுங்கில் ஒரு நேரத்தில் வெளியாகும் இப்படத்திற்கு ‘கஸ்டடி’ என பெயரிடப்பட்டுள்ளது. நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, ஜீவா வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்திக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதை படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்துள்ளார் நடிகர் நாகசைதன்யா. இந்தs சந்திப்பு குறித்து நாக சைதன்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “மேஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தபோது எனது முகத்தில் மிகப்பெரிய ஆனந்தம். அவருடை இசை என்னுடைய வாழ்க்கை பயணத்தில் நிறைந்திருக்கிறது. அதிகம் முறை அவரது இசையை மனதில் வைத்து நடித்துள்ளேன். தற்போது என்னுடைய கஸ்டடி படத்திற்கு இசையமைத்துள்ளார். உண்மையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்” என பதிவிட்டுள்ளார்.

இந்தப் படம் இந்தாண்டு மே மாதம் 12ஆம் தேதி திரையரங்கில் தமிழ், தெலுங்கில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT