சிரிஷ் நடிப்பில் உருவாகி வரும் 'ராஜா ரங்குஸ்கி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.
'மெட்ரோ' படத்தைத் தொடர்ந்து தரணீதரன் இயக்கத்தில் உருவான படத்தில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் சிரிஷ். 'ராஜா ரங்குஸ்கி' என பெயரிடப்பட்ட இப்படத்தில் சாந்தினி நாயகியாக நடித்து வந்தார்.
யுவன் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி முழுமையாக முடிவுற்றுள்ளது. இப்படத்தை பர்மா டாக்கீஸ் மற்றும் வாசன் தயாரிப்பு நிறுவனம் இருவரும் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்.
மொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது 'ராஜா ரங்குஸ்கி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
'ராஜா ரங்குஸ்கி' MOTION POSTER:
</p>