அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘திருவின் குரல்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், பாரதிராஜா, ஆத்மிகா, சுபத்ரா ராபர்ட், அஷ்ரப், ஜீவா உட்பட பலர் நடிக்கிறனர். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். சின்டோ போடுதாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம், ஹரிஷ் பிரபு இயக்குநராக அறிமுகமாகிறார்.
படம்பற்றி அவர் கூறியதாவது: இது தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உணர்ச்சிபூர்வமான கதையைச் சொல்லும் படம். பேச்சுக்குறைபாடு கொண்டவராக அருள்நிதி நடிக்கிறார்.
அவர் தந்தையான பாரதிராஜாவுக்கு ஒரு விபத்து நடக்கிறது. அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள். அங்கு நடக்கும் சில பிரச்சினைகள் அதிர்ச்சி அளிக்கிறது. அது என்ன என்பது படம். அருள்நிதி, பாரதிராஜாவின் நடிப்புப் பேசப்படும் விதமாக இருக்கும். ஆத்மிகா, அருள்நிதியின் அத்தைப் பெண்ணாக வருகிறார்.
படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ரிலீஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு ஹரீஷ் பிரபு கூறினார்.