கடந்த பிப்ரவரி மாதத்தில் பாடகி சுசித்ரா, திரையுலக பிரபலங்கள் பலரின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் அவற்றை தான் வெளியிடவில்லை என்றும், தனது ட்விட்டர் பக்கத்தை யாரோ ‘ஹேக்’ செய்து இவற்றை வெளியிடுவதாகவும் கூறியிருந்தார். அவரது கணவர் கார்த்திக்கும் இதே விளக்கத்தை கொடுத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை சென்னை காவல் ஆணையர் அலுவல கத்துக்கு சுசித்ராவும், அவரது தோழி ஒருவரும் நேரில் வந்து, ஒரு புகார் மனுவை கொடுத்துச் சென்றனர்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது: எனது முகநூல் மற்றும் ட்விட் டர் பக்கத்தை சில நாட்களுக்கு முன்பு யாரோ முடக்கி விட்டனர். பின்னர் அதி லிருந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டனர். இப்போது எனது பெயரில் சுமார் 40 முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் உள்ளன. இதில் ‘சுச்சீ லீக்ஸ்’ என்ற பெயரில் பல தவறான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுகின்றனர். எனது முகநூல், ட்விட்டர் பக்கங்களுக்கு இப்போது நிறைய பேர் ஆபாச படங்களை அனுப்புகின்றனர். எனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களை முடக்கி அதில் தவறான படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.