தமிழ் சினிமா

நடிகர் பொன்னம்பலத்துக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை

செய்திப்பிரிவு

பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் நடித்துள்ள இவருக்கு கடந்த 2021ம் ஆண்டு சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நடிகர்கள் சிரஞ்சீவி, தனுஷ், சரத்குமார், கமல்ஹாசன் உட்படபல திரையுலகினர் மருத்துவச் செலவுக்கு உதவினர்.

இந்நிலையில் அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. அவர் சகோதரி மகன் ஜெகந்நாதன் (35) சிறுநீரகத்தை அளித்துள்ளார். இதையடுத்து மருத்துவர்களுக்கும் தனக்கு உதவி செய்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பொன்னம்பலம்.

SCROLL FOR NEXT