தமிழ் சினிமா

நயன்தாரா வீட்டுக்கு ஷாருக்கான் சென்றது ஏன்?

செய்திப்பிரிவு

‘பதான்’ படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் ஷாருக்கான், அடுத்து 'ஜவான்' படத்தை அதிகம் எதிர்பார்க்கிறார். இந்தப் படம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. நயன்தாரா நாயகியாகவும் விஜய்சேதுபதி வில்லனாகவும் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் சென்னை வந்த ஷாருக்கான், நயன்தாராவின் வீட்டுக்குத் திடீரென சென்றார்.

நயன்தாராவுக்கு வாடகைத் தாய் மூலம் சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அதைக் காணச் சென்ற ஷாருக்கான், வீட்டில் இருந்து வெளியே வந்ததும் ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். புகைப்படம் எடுக்க முயன்றனர்.

அவர்களுக்கு வழக்கம் போல பறக்கும் முத்தம் கொடுத்த ஷாருக்கான், பின்னர் அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

SCROLL FOR NEXT