தமிழ் சினிமா

சந்தானம் ஜோடியானார் மேகா ஆகாஷ்

செய்திப்பிரிவு

சந்தானம் நடிக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது. பீரியட் காமெடி-ட்ராமா படமாக உருவாகும் இதை கார்த்திக் யோகி இயக்குகிறார். நிழல்கள் ரவி, ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், ராஜேந்திரன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் சந்தானம் ஜோடியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்து வருகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT