தமிழ் சினிமா

நளினி நடிக்கும் பாட்டி சொல்லைத் தட்டாதே

செய்திப்பிரிவு

மனோரமா, பாண்டியராஜன், ஊர்வசி நடித்து, 1988ம் ஆண்டு வெளியான படம், ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’. இப்போது அதே பெயரில், நளினி நடிப்பில் மற்றொரு படம் உருவாகி இருக்கிறது. என்ஜாய் சினிமாஸ் மற்றும் ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஹேம சூர்யா இயக்கி இருக்கிறார். கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், அனுஷீலா உட்பட பலர் நடித்துள்ளனர்.

இதன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் ராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இசையமைப்பாளர் சங்க தலைவர் தினா வெளியிட எஸ்.ஏ. ராஜ்குமார் பெற்றுக்கொண்டார். நளினி பேசும்போது, “கரோனா காலத்தில் உருவாக்கப்பட்ட அருமையான கதையை கொண்ட படம் இது. சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஆச்சி மனோரமா நடித்த இந்தப் படத் தலைப்பை ஏவி.எம் நிறுவனத்திடம் அனுமதி பெற்று பயன்படுத்தி இருக்கிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT