சென்னை: நடிகர் கவின் நடிப்பில் உருவாகி உள்ள ‘டாடா’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. வரும் 10-ம் தேதி இந்தப் படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கவின், அபர்ணா தாஸ், பாக்யராஜ், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களாக நடித்துள்ள திரைப்படம் டாடா. இதனை கணேஷ் கே.பாபு இயக்கி உள்ளார். இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசை அமைத்துள்ளார். அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. சுமார் 2.09 நிமிடங்கள் டைம் டியூரேஷன் கொண்டுள்ளது இந்த ட்ரெய்லர். ஜாலியான ஒரு இளைஞனின் வாழ்வில் ஏற்படும் காதல், குப்பைத்தொட்டியில் கிடைக்கும் குழந்தையினால் ஏற்படும் மாற்றம் என நகர்கிறது இந்த ட்ரெய்லர். அதுதான் கதை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.