அகரம் பவுண்டேஷனின் அலுவலக பணிகளுக்காக, தான் வாழ்ந்து வந்த தி.நகர் வீட்டை தானமாக வழங்கியுள்ளார் சிவகுமார்.
நடிகர் சிவகுமார் ஆரம்ப காலத்திலிருந்து தி.நகர் பகுதியில் வாழ்ந்து வந்தார். அவர் சென்னைக்கு வந்த காலத்தில் சொந்தமாக வாங்கிய வீடாகும். இங்கு தான் சூர்யா, கார்த்தி, பிருந்தா ஆகியோர் பிறந்து வளர்ந்தனர். மூவருக்கும் திருமணமாகி, குழந்தைகள் பிறந்ததும் இதே வீட்டில் தான்.
இந்த வீடு சிவகுமாரின் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாகும். தற்போது இந்த வீட்டை, 'அகரம் பவுண்டேஷன்' நிறுவனத்தின் அலுவலக பணிகளுக்கு தானமாக வழங்கியுள்ளார் சிவகுமார்.
அனைவருமே கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்ற விருப்பத்தில், சூர்யா 'லட்சுமி இல்லம்' என்ற பெயரில் பிரம்மாண்டமான வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். அங்கு சிவகுமாரின் மொத்த குடும்பத்தினரும் குடியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.