‘துணிவு' படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்தை விக்னேஷ்சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதை லைகா தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைப்பதாகவும் சந்தானம், அரவிந்த் சாமி ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில், இந்தப் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ட்விட்டரில் இந்தச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு ‘ஜஸ்டிஸ் ஃபார் விக்னேஷ்சிவன்’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்துக்கும் லைகா நிறுவனத்துக்கும் பிடிக்கவில்லை என்றதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் இதனால், இயக்குநர் மகிழ் திருமேனி, அஜித்தை இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மகிழ் திருமேனி, நடிகர் விஜய்க்கு ஏற்கனவே சொன்ன கதையை அஜித் நடிப்பில் இயக்க இருக்கிறார் என்கிறார்கள். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.