கோப்புப்படம் 
தமிழ் சினிமா

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் குறும்படம் - வைரலாகும் வீடியோ

செய்திப்பிரிவு

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் குறும்பட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சினிமா இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக தனது மகன் சஞ்சய்க்கு நடிப்பதைத்தாண்டி படங்களை இயக்குவதில் தான் ஆர்வம் இருப்பதாக நடிகர் விஜய் தெரிவித்திருந்தார். விஜய்யின் மகன் சஞ்சய் சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் குறும்படம் ஒன்றை இயக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாத்தா சந்திரசேகரைப் போலவே சஞ்சய்யும் இயக்கத்தில் ஆர்வம் கொண்டிருப்பதாக கூறி நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT