தமிழ் சினிமா

ஜனவரி 30-ல் வெளியாகும் நானியின் ‘தசரா’ டீசர்  

செய்திப்பிரிவு

ஜனவரி 30-ம் தேதி நானி நடிக்கும் ‘தசரா’ படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி ‘அடடே சுந்தரா’ படத்தைத் தொடர்ந்து நடிக்கும் படம் ‘தசரா’. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், ‘தசரா’ படத்தின் டீசர் ஜனவரி 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT