தமிழ் சினிமா

பிப்.3-ல் யோகிபாபுவின் ‘பொம்மை நாயகி’

செய்திப்பிரிவு

அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம், ‘பொம்மை நாயகி’. சுபத்ரா, ஹரி, ஜி.என்.குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர். யோகிபாபு மகளாக ஸ்ரீமதி நடித்திருக்கிறார்.

“எளிய குடும்பத்து தகப்பனுக்கும் மகளுக்கும் இந்த சமூகத்தால் ஏற்படும் ஒரு சம்பவமும், அதை எதிர்கொள்ளும் தகப்பனின் உணர்வுபூர்வமான நிலையும்தான் இந்தப் படம். யோகிபாபு தனித்தன்மையான நடிப்பை வழங்கி இருக்கிறார். பிப். 3 ம் தேதி தியேட்டரில் வெளியாகிறது.

யோகிபாபுவின் சிறந்த படங்களில் ஒன்றாக இது இருக்கும்” என்கிறது படக்குழு. அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார். பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

SCROLL FOR NEXT