தமிழ் சினிமா

மேடையில் பேசாத விரதத்தை முடிக்கிறேன்: பாரதிராஜா

செய்திப்பிரிவு

இதுநாள் வரை நான் மேடையில் பேசுவதைத் தவிர்த்து வந்தேன். இனி அந்த விரதத்தை இயக்குநர் ஜீவனுக்காக முடிக்கிறேன் என இயக்குநர் பாரதிராஜா பேசியுள்ளார்.

இயக்குநர் பிரபு சாலமன் தயாரிப்பில், இயக்குநர் ஜீவனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மொசக்குட்டி திரைப்படத்தின் இசை வெளியீடு, சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் பங்கேற்ற இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது:

"சில கிழவர்களுக்கு வயதின் காரணமாக வைராக்கியம், பிடிவாதம் என ஏதோ ஒன்றிருக்கும். பேரக் குழந்தைகள் கிள்ளி விளையாடி அந்த விரதத்தை உடைத்து விடுவார்கள், அப்படித்தான் நான் சம்பிரதாயமாக மேடைகளில் பேசுவதை தவிர்த்துக்கொண்டு வந்தேன். இனிமேல், அந்த விரதத்தை ஜீவனுக்காக முடிக்கிறேன். விஞ்ஞான ரீதியாக நாம் எவ்வளவோ வளர்ந்திருந்தாலும், தாய்ப்பால் தாய்ப்பால் தான். அதற்கு ஈடு வேறெதுவுமில்லை.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பிரபு சாலமன் ஓர் அற்புதமான எழுத்தாளன், சிறந்த பேச்சாளன், எளிமையானவன் எங்களது வறண்ட பூமியில் முளைத்த ஒரு கற்பக விருட்சம். பிரபு சாலமன் பேசும் பொழுது நீங்கள் வந்து விடுங்கள் என்று சொன்னார். நான் எங்கும் செல்லவில்லை. இங்கு இரண்டாவது இன்னிங்ஸ் என்பதே கிடையாது. ஒரே இன்னிங்ஸ் தான். நாங்கள் இன்னும் ஓட்டிக்கொண்டு தான் இருக்கிறோம்.இன்னும் இரண்டாண்டு காலத்தில் மூன்று படைப்புகளைக் கொடுப்பேன்.

இவ்வாறு பாரதிராஜா பேசினார்

பாரதிராஜா பேசியதன் வீடியோ பதிவு:-

SCROLL FOR NEXT