வடிவேலு மற்றும் அவரது தாயார் 
தமிழ் சினிமா

உடல் நலக்குறைவால் நடிகர் வடிவேலுவின் தாயார் மரணம் 

செய்திப்பிரிவு

மதுரை: வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக உள்ள வடிவேலுவின் குடும்பத்தினர் மதுரையில் வசித்து வருகின்றனர். வடிவேலுவின் தாய் சரோஜினி (87) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று (ஜன.19) இரவு சிகிச்சை பலனின்றி மதுரை விரகனூரில் மரணம் அடைந்தார். இவரது மரணம் வடிவேலுவின் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT