இயக்குநர் தங்கர்பச்சான், ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில், பாரதிராஜா, யோகிபாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், அதிதி பாலன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இதுபற்றி தங்கர் பச்சான் கூறும்போது, “இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது.
இனி வரும் நாட்கள் படைப்பை செறிவூட்டி உயிருள்ள படைப்பாக மாற்றுவதற்கான நாட்கள். இவ்வாண்டு இறுதிக்குள் என் இயக்கத்தில் மூன்று படைப்புகள் வெளிவரும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.