தமிழ் சினிமா

‘வாரிசு’, ‘துணிவு’ கூடுதல் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி

செய்திப்பிரிவு

‘வாரிசு’, ‘துணிவு’ படங்களுக்கு கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, வரும் 13, 14, 15 மற்றும் 16 ம் தேதிகளில் விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ படங்களை அதிகாலை 4 மற்றும் 5 மணிக்கு சிறப்புக் காட்சிகளாக வெளியிட தமிழக அரசு தடை விதித்திருந்தது. மேலும், திரையரங்கு நுழைவு வாயில்களில் உயரமான பேனர், கட்அவுட் வைத்து, பாலாபிஷேகம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும் நேற்று நள்ளிரவு ஓரு மணி அளவில் அஜித்தின் துணிவு திரைப்படமும், அதிகாலை 4 மணிக்கு விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியிடப்பட்டிருந்தன. இரு படங்களின் சிறப்பு காட்சிகளுக்கும் ரசிகர்கள் திரளாக வந்ததால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் போன்ற சம்பவங்கள் அரங்கேறின. இதனாலேயே கூடுதல் காட்சிகளுக்கு தடை விதித்தது தமிழக அரசு.

தற்போது தியேட்டர் அதிபர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12, 13 மற்றும் 18ம் தேதிகளில் கூடுதல் காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

SCROLL FOR NEXT