தமிழ் சினிமா

ஹெத்தையம்மன் திருவிழா: பாரம்பரிய உடையில் சாய் பல்லவி

செய்திப்பிரிவு

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இதில் அவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் கவனிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசி நடிகையானார். தமிழை விட இப்போது தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர், கோத்தகிரியில் அமைந்துள்ள படுகர் இனத்தின் ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவில் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றுள்ளார். அங்கு, குடும்பத்தினருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படங்கள் வைரலாகி வருகின்றன.

Caption
SCROLL FOR NEXT