நடிகர் விமல், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வதந்திகள் கிளம்பிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் வீடியோ ஒன்றை இப்போது வெளியிட்டுள்ளார்.
அதில், ‘எனக்கு மாரடைப்பு இல்லை, நான் முழு ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்கிறேன். தற்போது ’மைக்கேல்’ படப்பிடிப்பில் உள்ளேன். மேலும் நான் மதுவுக்கு அடிமையாகி ரகசிய சிகிச்சை எடுத்து வருவதாகவும் வதந்தி பரவி வருகிறது.
இந்த வேலைகளை யார் செய்கிறார்கள் என்று தெரியும். என்னை காயப்படுத்த வேண்டும் என்பதற்காகச் செய்கிறார்கள். இந்த சின்னப்பிள்ளை வேலையை விட்டுவிட்டுப் பிழைக்கும் வழியைப் பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.