கோப்புப் படம் 
தமிழ் சினிமா

“தந்தை இசையையும், தாய் அன்பையும் கற்றுகொடுத்தனர்” - ஹாரிஸ் ஜெயராஜ்

செய்திப்பிரிவு

தனது பிறந்த நாளில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பெற்றோருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘மின்னலே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். ஏராளாமான படங்களுக்கு இசையமைத்துள்ள அவர் நினைவில் நிற்கும் பாடல்களை தனது இசையின் மூலம் கொடுத்துள்ளார். அண்மையில் ‘தி லெஜண்ட்’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்நிலையில், தனது பிறந்த நாளையொட்டி ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பெற்றோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள அவர், அதில் “இன்று நான் என்னவாக இருக்கிறேன் என்பதற்கு இந்த நாளில் எனது பெற்றோருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என் தந்தை எனக்கு இசையைக் கற்றுக் கொடுத்தார், என் அம்மா எனக்கு அன்பைக் காட்டவும் அடக்கமாகவும் இருக்க கற்றுக் கொடுத்தார்.(நான் 2 வயதாக இருக்கும்போது, எங்கள் வீட்டின் முன் எடுத்த புகைப்படம்)” என பதிவிட்டுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT