பன்னீர் செல்வம் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக பாபி சிம்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் 'கவண்' படத்தின் இறுதிகட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. அதனைத் தொடர்ந்து தியாகராஜன் குமாராஜா படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படங்களை முடித்துவிட்டு, 'ரேணிகுண்டா' இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2-ம் வாரத்தில் தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக பாபி சிம்ஹா, நாயகியாக ரித்திகா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இசையமைப்பாளராக இமான் பணியாற்ற இருக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவிருக்கும் இப்படம் ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.