தமிழ் சினிமா

பாஸ்கர் தி ராஸ்கல் ரீமேக்: மம்முட்டி வேடத்தில் அரவிந்த்சாமி

ஸ்கிரீனன்

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பாஸ்கர் தி ராஸ்கல்' தமிழ் ரீமேக்கில் அரவிந்த்சாமி நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.

மம்முட்டி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. சித்திக் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தை தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளின் ரீ-மேக்கையும் நானே இயக்கவிருப்பதாகவும், நயன்தாரா நாயகியாக நடிப்பார், நாயகர்கள் மட்டும் மாறுவார்கள் என்று இயக்குநர் சித்திக் கூறி இருந்தார்.

தமிழில் மம்முட்டி கதாபாத்திரத்தில் ரஜினி, அஜித் உள்ளிட்ட பலர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ரஜினி இப்படத்தைப் பார்த்து மிகவும் பாராட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாட்களாக நிலவி வந்த இப்படத்தின் சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் ரீமேக்கில் மம்முட்டி வேடத்தில் அரவிந்த்சாமி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. சித்திக் இயக்கவிருக்கும் இப்படத்தின் நாயகி மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது 'சதுரங்க வேட்டை 2' படத்தில் கவனம் செலுத்தி வரும் அரவிந்த்சாமி, அதனைத் தொடர்ந்து 'பாஸ்கர் தி ராஸ்கல்' ரீமேக்கில் கவனம் செலுத்த இருக்கிறார்.

SCROLL FOR NEXT