நடிகர் 'மாயி' சுந்தர் 
தமிழ் சினிமா

வெண்ணிலா கபடி குழு புகழ் நடிகர் 'மாயி' சுந்தர் காலமானார்

செய்திப்பிரிவு

வெண்ணிலா கபடி குழு திரைப்பட புகழ் நடிகர் 'மாயி' சுந்தர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல்நிலை குறைவால் காலமானார். அவருக்கு வயது 50.

மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், மிளகாய், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி, கட்சிக்காரன் என ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்சள் காமாலை நோய்க்காக, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் திருமணம் செய்துக் கொள்ளவில்லை,

SCROLL FOR NEXT