தமிழ் சினிமா

கமல் தயாரிப்பில் விஜய் சேதுபதி?

செய்திப்பிரிவு

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க இருந்தார். ஆனால், அவர் அமைச்சர் ஆகிவிட்டதால், இந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் உதயநிதிக்குப் பதில், விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் தரப்பில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தவில்லை.

கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\.

SCROLL FOR NEXT